கரூர் : கரூரில் சரியான சிகிச்சை கொடுக்காததார்ல குழந்தை உயிரிழந்து விட்டதாகக் கூறி, சடலத்துடன் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அடுத்த வாங்கப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கீர்த்தி பிரியா – அருண்குமார் தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் 2வது குழந்தையின் பிரசவத்திற்காக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் அமைந்துள்ள தனியார் சிறப்பு குழந்தையின்மை மருத்துவமனையில் கடந்த 19ம் தேதி சிகிச்சைக்காக கீர்த்தி பிரியா சேர்க்கப்பட்டுள்ளார். 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்தது முதல் அழுகுரல் கேட்கவில்லை எனவும்., சரிவர குழந்தை பால் குடிக்கவில்லை எனவும் கூறப்பட்ட நிலையில், அந்த குழந்தையினை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில், 21ம் தேதி காலை 11 மணி வரை குழந்தைக்கு மருத்துவர்கள் மூலம் முறையாக எந்தவித சிகிச்சையும் அளிக்கவில்லை எனவும், செவிலியர்கள் மட்டுமே மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
பின்னர், மருத்துவர் குழந்தையை பார்த்துவிட்டு குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருப்பதாகவும், எனவே மேல்சிகிச்சைக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வற்புறுத்தியதாக கூறப்பட்ட நிலையில், அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் உறவினர்கள் குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஆறு மணி நேரத்திற்கு முன்பாக கொண்டு வந்து இருந்தால் குழந்தையை நிச்சயம் காப்பாற்றி இருக்கலாம் எனவும், நேரம் கடந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை 11 மணி அளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. குழந்தை இறந்ததற்கு தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணம் என்று கூறி குழந்தையின் தாய் கீர்த்தி பிரியா – தந்தை அருண்குமார் உள்ளிட்ட உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் நடத்தினர்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டும் மருத்துவமனை நிர்வாகம் தவறை ஒத்துக் கொள்ள மறுத்ததாக கூறி விரக்தியடைந்த பெற்றோர்கள், வருங்காலத்தில் மற்ற குழந்தைகளுக்கு சரியான சிகிச்சை அளித்து பிள்ளைச்செல்வத்தினை காப்பாற்றுங்கள் என்று கூறி உயிரிழந்த குழந்தையின் உடலை எடுத்துக் கொண்டு இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
This website uses cookies.