தாய் அன்புக்கே ஈடேதம்மா.. வழிதவறி சென்ற குட்டி.. சேர்த்த வனத்துறை.. அரவணைத்த தாய் யானை : வைரலாகும் CUTE வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2024, 4:30 pm

தாய் அன்புக்கே ஈடேதம்மா.. வழிதவறி சென்ற குட்டி.. சேர்த்த வனத்துறை.. அரவணைத்த தாய் யானை : வைரலாகும் தூங்கும் வீடியோ!

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த வாரம் பன்னி மேடு பகுதியில் ஐந்து மாத குட்டியானை தாய் யானையிடமிருந்து பிரிந்து தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்தது.

குட்டி யானையை வனத்துறையினர் பிடித்து தாய் யானையிடம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சேர்த்தனர். நிலையில் வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்பொழுது பன்னி மேடு பகுதியில் பாறையின் அருகே குட்டி யானையும் தாய் யானையும் தூங்கிக் கொண்டு இருந்தது.மேலும் யானையை பார்ப்பதற்கு அப்பகுதி மக்கள் திரண்டனர்.

ஆனால் வனத்துறையினர் பொதுமக்களை அப்பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.வனத்துறை அப் பகுதியில் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்பொழுது தாய் யானையும் குட்டி யானையும் தூங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…