எந்த குழந்தை இருந்தா என்னம்மா?.. கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? பாலினம் கண்டறியும் கும்பலை லெஃப்ட் ரைட் வாங்கிய அதிகாரி..!

Author: Vignesh
29 June 2024, 4:52 pm

பென்னாகரம் அடுத்த நெக்குந்தி அருகே கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பல் பிடிபட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில் லலிதா என்ற இடைத்தரகர் மூலம், முறையான படிப்பறிவு இல்லாத கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவர், கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிந்து சொல்லும் கும்பலை, சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையிலான குழுவினர், ஆளில்ல வீட்டில் பரிசோதனை செய்த போது சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதில், தலா ரூ.13,000 வீதம் பெற்றுக் கொண்டு 4 பெண்களுக்கு, நடமாடும் கருவி மூலம் பரிசோதனை செய்து, கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவித்துள்ளனர். இந்த முருகேசன் ஏற்கனவே, சட்டவிரோதமாக, கருக்கலைப்பு செய்ததால், கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து, கையும் களவுமாக சிக்கிய கும்பலிடம் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி கோபமாக பேசும் காட்சிகள் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. “ஒரு இழு இழுத்தேன்னா அவ்ளோதான்.. எத்தனை குழந்தைய இப்படி அழிச்சிருக்க? இனி நீ வெளியில் வர முடியாது என ஸ்கேன் செய்து சொல்லும் முருகேசன் இடம் அவர் கோபமாக பேசியுள்ளார். இடைத்தரகராக செயல்பட்ட பெண்ணிடம் கோபமாக பேசிய சாந்தி தொண்டை தண்ணி வத்த கத்துறோமே எந்த குழந்தையா இருந்தால் என்ன இந்த மாதிரி 20 புக் புரோக்கர்கள் இருக்கிறார்கள். உங்களை ஒழித்தால் தான் தர்மபுரி உருப்படும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

  • new title for kamal haasan in thug life movie அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?