வனத்துறை அலுவலகத்தில் நடந்த வளைகாப்பு…! பெண் வனக்காப்பாளரை நெகிழ வைத்த சக பணியாளர்கள்…!!

Author: kavin kumar
26 January 2022, 10:42 pm

திண்டுக்கல் : நத்தம் வனத்துறை அலுவலகத்தில் பெண் வனக்காப்பாளருக்கு சக வனத்துறை பணியாளர்கள் வளைகாப்பு நடத்தி வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வனச்சரகம் கோட்டையூர் வனப்பகுதியில் விஜயலட்சுமி(31) வனக்காப்பாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோர் ராம்நாடு அருகே சாயல்குடி பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இவருக்கு சத்தியேந்திரன் என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது 9 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதனை அறிந்த நத்தம் வனசரக அலுவலர் பாஸ்கரன் மற்றும் வனப் பணியாளர்கள் அந்த (விஜயலட்சுமிக்கு) பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்தனா்.

Thumbnail image

அதன்படி வனச்சரக அலுவலர் பாஸ்கரன், வனவர்கள் சம்பந்தமூர்த்தி, முத்துசாமி ஆகியோா் முன்னிலையில் வனக் காப்பாளர்கள், வனக்காவலர்கள், பெண் வனக் காப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் ஏழு விதமான உணவு, பிரியாணி வகைகளுடன் சேலை, பழங்கள், வளையல் உள்ளிட்ட பொருள்களை சீா்வரிசையாக வைத்து வனத்துறையினர் சிறப்பாக நடத்தினா். சக வனத்துறை பெண் வனக்காப்பாளருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. சக பெண் வனபணியாளர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

baby shower ceremony
  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…