வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு… கிராமத்திற்கே விருந்து வைத்த உரிமையாளர் : சுவாரஸ்யமான வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2024, 2:58 pm

வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு… கிராமத்திற்கே விருந்து வைத்த உரிமையாளர் : சுவாரஸ்யமான வீடியோ வைரல்!

பலருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிரியமாக இருப்பார்கள். வீட்டில் செல்லமாக நாய்க்குட்டிகளை தன் வீட்டு பிள்ளைகள் போல வளர்ப்பார்கள். நாய்களும் தன்னை வளர்ப்பவர்களுக்கு நன்றியுள்ள விலங்களாக இருக்கும். இந்நிலையில் ஒரு குடும்பம் தன் வீட்டில் கர்ப்பமாக இருந்த நாய்க்கு வளைகாப்பு நடத்தி அசத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சென்னப்பள்ளி ஊராட்சியில் கூராக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாராயணன் – ராதா என்பவரின் கர்பமான வளர்ப்பு நாய்க்கு வளையல் , புத்தாடை , பூக்கள் பழங்கள் உள்ளிட்டவை வைத்து கிராம பெண்கள் சூழ பாட்டு பாடி வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய நாயின் உரிமையாளர்.

மேலும் தனது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு செய்து கிராமத்திற்க்கு உணவு சமைத்து பரிமாறி உள்ளார் . இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி