பள்ளி மாணவிகள் நடத்திய வளைகாப்பு விவகாரம் : நீக்கப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் செய்த சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2024, 2:33 pm

வேலூர் அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் இயங்கும் அரசு பெண்கள் பள்ளியில், 12-ம் வகுப்பு மாணவிகள் சிலர் பள்ளி சீருடையில் வகுப்பறை மாடிக்குச் சென்று, சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போல வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்டிருந்தனர்.

அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக வைரலான நிலையில், பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கே நேரில் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சென்று நேரடி விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மாணவிகளின் வகுப்பு ஆசிரியர் சாமுண்டீஸ்வரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.

முதன்மை கல்வி அலுவலரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாவட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முதல் கருப்பு பட்டை (பேட்ச்) அணிந்து ஆசிரியர் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து

மேலும் படிக்க: 6 வயது சிறுமியை பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்ற காமுகன்.. கடவுள் போல வந்த குரங்குகள்..!!

பணியிட நீக்கத்தை ரத்து செய்யும் வரை பல்வேறு வகைகளில் மாவட்டத்தில் போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர் சங்க கூட்டமைப்பு நேற்று தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

வேலூர் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பள்ளிகளுக்கு சென்று இருக்கிறார்கள்.

பணியிட நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் சாமுண்டீஸ்வரி உடனே பணியில் அமர்ந்த அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கருப்பு பேட்ச் அணித்து பள்ளிக்கு சென்று மாணவர்களிடையே பாடம் எடுத்தது வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 985

    0

    0