தரமற்ற தார் ரோடு… நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் : மூன்று பேருக்கு மெமோ கொடுத்து அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2023, 9:42 pm

தரமற்ற தார் ரோடு… நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் : மூன்று பேருக்கு மெமோ கொடுத்து அதிரடி!!

கோவையில் நேற்று முன்தினம்‌ இரவு, கூட்ஸ்‌ ஷெட்‌ சாலையில் 800 மீட்டர் நீளத்துக்கு ரூ.1.10 கோடியில் புதியதாக ரோடு போடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பழைய ரோட்டை தோண்டி எடுக்காமல் லேசாக மில்லிங் செய்துவிட்டு, தார் ரோடு போடப்பட்டது.

அந்த தகவல், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு சென்றது. நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

புதியதாக போடப்படும் ரோட்டின் நீளம், அகலம், தார் கலவை வெப்ப அளவு உள்ளிட்டவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினார். ஒரு மணி நேரம் அங்கேயே இருந்து, தரமாக ரோடு எப்படி போமுவது என்றபது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களக்கு கற்றுக் கொடுத்தார்.

நேற்று காலை 8 மணிக்கு அதே பகுதிக்கு வந்த ஆணையர் மீண்டும் சென்று ஆய்வு செய்தார்,. ஜல்கிக்கற்கள் மீது ரோலர் இயக்கி, காம்பேக்ட் செய்யாமல் இருந்தது.

ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து கிடந்தன. அவர் சொல்லிக் கொடுத்தது போல், தார் ரோடு போடாததால் கோபமடைந்த ஆணையர், ஒப்பந்த நிறுவனமான விஷ்ணு இன்ப்ரா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

இந்த பணியை கள ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்யாத குற்றத்துக்காக உதவி பொறியாளர் பர்மான் அலி, உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன், நிர்வாக பொறியாளர் கருப்பசாமி ஆகியோருக்கு மெமோ வழங்க ஆணையர் உத்தரவிட்டார்.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?