இது என்ன ரோடா இல்ல ரொட்டியா? தரமற்ற தார் சாலை… போட்ட வேகத்தில் பெயர்ந்து வரும் அவலம் : ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 6:07 pm

விழுப்புரம் : வீடூர் அணை மீது போடப்பட்ட தரமற்ற சாலையை கையால் பெயர்த்து எடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அருகே உள்ள வீடூர் அணையில் தூர்வாரி கரையை பலப்படுத்த 43 கோடி செலவில் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணி சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது அணையில் மேலே சாலை அமைக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அந்த சாலை தரமற்றதாக போடப்படுவதாக ஆத்திகுப்பம் பகுதி கிராம மக்கள் போடப்பட்ட சாலையை கையால் அடை போல் பிரித்து எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனால் வீடூர் அணையை சுற்றியுள்ள கிராம மக்கள் அந்தந்த பகுதியில் போடப்பட்ட சாலையை இதே போல கையால் இழுத்துப் பார்த்தபோது தரமற்ற சாலையை போட்டுள்ளதாக கோபமடைந்த கிராம மக்கள் வேறொரு இடத்தில் இதே போல சாலையை போட்டுக் கொண்டிருந்த பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அணையின் பொறியாளர் மற்றும் பணி ஒப்பந்ததாரர் நேரில் வந்து போராட்டத்தை கைவிடுமாறும் மீண்டும் அந்தப் பகுதியில் தரம் உள்ள சாலையை போடுவதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் திரும்பிச் சென்றனர்.

43 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கி எந்த பணியும் செய்யப்படவில்லை பெயர் அளவிற்கு அணையை தூர் வாரியதாகவும் அணையின் சுற்றுச்சுவர்களில் சுண்ணாம்பு அடித்து இதுபோல தரமற்ற சாலைகளை அமைத்து மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருவதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி 43 கோடி ரூபாய்க்கு எந்தெந்த வேலைகளை செய்தார்கள் என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 621

    0

    0