4 நாட்களாக வந்த துர்நாற்றம்.. பூட்டியிருந்த வீட்டுக்குள் ஷாக் : ஒரு குடும்பமே போச்சே..!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2024, 12:56 pm

திருப்பூர் அணைக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் குடியிருந்து வருகின்றனர். இதில் ஒரு காம்பவுண்டில் மூன்று தளங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் குடியிருந்து வருகின்றனர்.

இதில் முதலாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்பக்கமாக பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் வராண்டாவில் ஒரு பெண்ணும் படுக்கை அறையில் அவரது கணவர் மற்றும் மகள் என மூன்று பேரும் உடல் உப்பிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர்.

மேலும் படிக்க: நான் நினைத்தால் வருவேன், போவேன் : அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

உயிரிழந்து நான்கு நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும் துர்நாற்றம் வீசிய நிலையில் பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் நாக சுரேஷ் (35) அவரது மனைவி விஜி( 29) இவர் அணைக்காடு பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. கடன் பிரச்சனையா அல்லது குடும்பப் பிரச்சனையில் ஏதேனும் தற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அணைக்காடு பகுதியில் உள்ள வீட்டிற்கு குடிவந்து ஒரு வருடங்களே ஆன நிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!