கேரளாவுக்கு வாங்க.. அள்ளித் தரேன் : பஹ்ரைனில் வசித்த தமிழக இளைஞரை ஏமாற்றிய ‘மினி சேச்சி’..!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2024, 3:59 pm

இளம் பெண்ணின் ஆசை வார்த்தை நம்பி பஹ்ரினை காலி செய்து வந்த வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்

கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், நான் பக்ரைன் நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தேன். அங்கு அருகில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றிய கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த வினி என்ற ஏஞ்சல் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்தப் பெண் கேரளாவில் பியூட்டி பார்லர் தொழில் தொடங்க உள்ளதாகவும் அதில் அதிக வருமானம் வரும் என்றும் எனவே அதில் என்னை முதலீடு செய்ய சொன்னார்.

அதனை நம்பி நான் வங்கி மூலமாகவும் , நேரடியாகவும் பணம் மற்றும் தங்க நகைகள் என ஒரு கோடியே 21 லட்சம் கொடுத்திருந்தேன்.

தொழிலில் வரும் லாபத்தை எனக்கு தருவதாக உறுதியளித்திருந்தார் நான் வழங்கிய பணம் மற்றும் அதற்கான லாபம் குறித்து அந்த பெண்ணிடம் பலமுறை கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்தார்.

கடந்த மாதம் அவரை நேரில் சந்திக்க அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் கொல்லம் பகுதிக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை மேலும் அக்கம் பக்கத்திலிருந்து உள்ள விசாரித்த போது அந்த பெண் என்னைப் போன்று பல பேரிடம் தொழில் தொடங்குவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து மினி என்ற ஏஞ்சல் தலைமறைவு என தெரியவந்தது.

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருந்தேன் ஆனால் இதுவரை நடவடிக்கைகள் இல்லை. எனவே என்னை மோசடி செய்த பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனது பணத்தையும் மீட்டு தர வேண்டுமென மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரியின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் விசாரணை செய்து இரண்டு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.

  • Popular Actor Slams Surya Jyothikaநாரடிச்சிருவோம்.. உன் புருஷனுக்கு பொத்துக்கிட்டு வந்திருமே : ஜோதிகாவை விளாசிய பிரபலம்!
  • Views: - 177

    0

    0