லாக் செய்யப்பட்ட VAO பைக்கை திருட்டுத்தனமாக உடைத்து எடுத்து சென்ற பஜாஜ் நிறுவனம் : திருச்சி அருகே அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2024, 2:44 pm

லாக் செய்யப்பட்ட VAO பைக்கை திருட்டுத்தனமாக உடைத்து எடுத்து சென்ற பஜாஜ் நிறுவனம் : திருச்சி அருகே அதிர்ச்சி!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் கிராம நிர்வாக அலுவலர் சக்தி குமார் சமயபுரம் அருகே வெங்கங்குடி பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள ஸ்ரீ நாராயணா மஹால் திருமண மண்டபத்திற்கு இருசக்கர (பல்சர்) வாகனத்தில் சென்றுள்ளார்.

சுப நிகழ்ச்சி முடித்துக் கொண்டு திரும்பி வந்து இருசக்கர வாகனத்தை பார்த்தபோது காணவில்லை என தெரிய வந்ததை அடுத்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு திருமண மஹாலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் திருமண மண்டபத்திற்குள் வருவதும் அதில் ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு நோட்டமிட , மற்றொரு வாலிபர் கிராம நிர்வாக அலுவலர் இருசக்கர வாகனம் மீது அமர்ந்து காலால் லாவகமாக் சைட் லாக்கை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சியை பார்த்த போலீசார் உடனடியாக நம்பர் 1 டோல்கேட் சுற்றி பல்வேறு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, விஏஓ சக்திகுமாரின் வாகனத்தை திருடுவதற்கு உதவி செய்த லால்குடி அருகே கீழவாளாடி, கீழத் தெருவை சேர்ந்த சகாயராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

சக்திகுமார் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தை பஜாஜ் பைனான்ஸில் தவணை முறையில் வாங்கி உள்ளார். அதற்கு மாதம் தவறாமல் 4 ஆயிரம் தவணை செலுத்தி 2022 இல் முடிந்துள்ளது.

ஆனால் கிராம நிர்வாக அலுவலர் காசோலை இரண்டு முறை பவுன்ஸ் ஆனதாலும், ஒரு தவணை 4 ஆயிரம் செலுத்தவில்லை என ஒரு வருடத்திற்கு வட்டி மேல் வட்டி போட்டு 36,000 செலுத்தாமல் இருந்ததால் வாகனத்தை பக்கவாட்டு பூட்டை உடைத்து தன்னுடன் வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவர் எடுத்துச் சென்றார் என கூறியதைக் கேட்டு போலீசாரம் வாகனத்தின் உரிமையாளரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை அடுத்து கொள்ளிடம் போலீசார் சகாயராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இருசக்கர வாகனத்தை பூட்டை உடைத்து திருடிய பஜாஜ் பைனான்ஸ் மற்றொரு ஊழியர் சூர்யா என்பவர் தலைமறைவாகியுள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரு தவணை 4 ஆயிரம், இரண்டு செக் பவுன்ஸ் இருக்கு என ஒரு வருடம் கழித்து 36,000 கட்ட விலை எனக் கூறி அடாவடியாக இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து எடுத்துச் சென்ற பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 681

    0

    0