கேக் வெட்டற கத்தி இல்ல டா.. ஆள வெட்ட : பேக்கரி கடை உரிமையாளர் அடாவடி… பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2023, 4:18 pm

கேக் வெட்டற கத்தி இல்ல டா.. ஆள வெட்ட : பேக்கரி கடை உரிமையாளர் அடாவடி… பரபரப்பு சிசிடிவி காட்சி!!

தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே ஜவுளி கடை, பேக்கரி, மளிகை கடை உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளின் முன்பு செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம் மூலம் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு முழுமையாக அகற்றப்பட்டன.

மாதம் ஆக ஆக இந்த பகுதிகளில் மீண்டும் கடையின் உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய இரண்டு பேக்கரி கடைகளின் உரிமையாளர்களின் மகன்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் வந்தன.

இதனால் சில முறை கை கலப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று வியாபாரப் போக்கு காரணமாக ஏற்பட்ட தகராறில் பேக்கரி கடையின் ஒரு தரப்பினர் கத்தியை கொண்டு வந்து மற்றொரு தரப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அப்போது மற்றொரு தரப்பினரும் கத்தியை எடுத்து சென்றபோது மாரிமாரி பிரச்சனை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டன.

இதனால் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் முன்பு பேக்கரி கடையின் உரிமையாளர்கள் அவதூறாக கொச்சை வார்த்தைகளை பேசியதால் அங்கிருந்து மக்களிடையே முகம் சுளிப்பும் ஏற்பட்டன.

பின்பு தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இருதரப்பினர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் மனுவை பெற்றுக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

https://vimeo.com/872090087?share=copy

குறிப்பாக வியாபாரப்போக்கு காரணமாக இந்த தகராறு ஏற்பட்டாலும் கூட அதற்காக கத்தியை கொண்டு வந்து கொலை மிரட்டல் விடுவது அடாவடித்தனம்.

இருந்த போதிலும் அடிக்கடி ஏற்படும் இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மீண்டும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினால் இதுபோன்று பிரச்சனை ஏற்பாடாது என பொதுமக்களும் காவல்துறையினரும் தெரிவிக்கின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 418

    0

    0