ஆடி 18ஆம் தேதி பவானிசாகர் அணைக்கு வர பொதுமக்களுக்கு தடை : பொதுப்பணித்துறை அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan30 July 2022, 1:53 pm
ஆடி 18ம் தேதி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு சென்று நீர் தேக்க பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு இந்த வருடம் அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஆடி பதினெட்டாம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் பவானிசாகர் அணையின் மேற்பகுதியை பார்வையிட பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து அணை தற்போது 100 அடியை எட்டியுள்ளது.
இதனால் வெள்ள கால பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியும் மற்றும் அணையின் பாதுகாப்பு கருதியும் இந்த வருடம் ஆடி 18 ஆம் தேதி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு சென்று அணையின் நீர் தேக்க பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் கீழ்பவானி பூங்கா வழக்கம் போல் செயல்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.