திருப்பூரில் ஆவணங்களின்றி தங்கிய வங்கதேச இளைஞர்கள் கைது : ஆதார் கார்டு முறைகேடாக பெற்றது அம்பலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2022, 5:51 pm

உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த 5 வங்கதேச (பங்களாதேஷ்) இளைஞர்கள் கைது.

திருப்பூர் மாநகர் மங்கலம் சாலை சோதனை சாவடியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி திரிந்த 5 வடமாநில இளைஞர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஆதார் அட்டை உள்ளிட்ட இந்திய ஆவணங்களை முறைகேடாக பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் ரஷீத்சேக் , முகமத் சோஹித், ரஷிதுல், மிஷன்கான், சுமன் மசூந்தர் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!