நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேனர் : சர்ச்சையில் சிக்கிய காவலர்.. பாய்ந்தது வழக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2022, 7:56 pm

பெரம்பலூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு பெரம்பலூர் மாவட்ட ஆயுதபடையில் பணியாற்றும் தலைமை காவலர் கதிரவன் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உயதநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியானது. இதில் ஏராளமான கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஆர்டிகிள் 15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இருந்தாலும் படத்தில் சிறு சிறு கதைக்களத்தை மாற்றி எடுத்துள்ளனர். படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பெரம்பலூரில் உள்ள ஆயுதப்படை பிரிவை சேர்ந்த தலைமை காவலர் கதிரவன் என்பர் நெஞ்சுக்கு நீதி படம் வெளியானதை முன்னிட்டு, முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக படத்துடன் கூடிய பேனரை வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காவலர்களுக்கு வார ஓய்வு, மகப்பேறு விடுப்பு 1 வருடம், காவல் ஆணையம் அமைத்தது, காவலர் குடியிருப்பு சென்று ஆய்வு மற்றும் குறைகளை கேட்டறிந்தது, எஸ்.ஐ.,களுக்கு மாதத்தில் 2 நாள் ஓய்வு அளிக்கப்பட்டது போன்ற காவலர் நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு சிறப்பாக முன்னெடுத்துள்ளதற்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்து பேனரை வைத்ததாக அவர் கூறியுள்ளார்.

மருத்துவ விடுப்பில் இருக்கும் காவலர் கதிரவன் ப்ளக்ஸ் வைத்ததால் அவர்மீது தமிழ்நாடு திறந்தவெளி அழகை சிதைக்கும் சட்டம் செக்சன் 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாவட்ட காவல்துறை அலுவலகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1003

    0

    0