‘போலீஸ்கிட்டயே போனாலும் உனக்கு முடி வெட்ட முடியாது’.. பட்டியலின இளைஞருக்கு முடிவெட்ட மறுப்பு : மீண்டும் ஒரு தீண்டாமை சம்பவம்

Author: Babu Lakshmanan
11 May 2024, 5:49 pm

தருமபுரி அருகே உள்ள கௌாப்பாறையை சேர்ந்த பட்டியலின இளைஞருக்கு முடி வெட்ட மறுத்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி கிராமத்தில் யோகேஷ் என்ற பெயரில் சலூன் கடை ஒன்று உள்ளது. இங்கு கடந்த 9ம் தேதி மாலை கௌாப்பாறையை சேர்ந்த ஓட்டுநர் இளங்கோ என்பவரது மகன் சஞ்சய் என்ற இளைஞர் முடிவெட்ட சென்றுள்ளார். அப்போது யோகேஷ் என்பவர் நீ எந்த ஊர் என கேட்டதற்கு, நான் கௌாப்பாறை காலனி பகுதியை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அரசுப் பணிக்கு போலி நியமன ஆணை… ரூ.77 லட்சம் சுருட்டிய சர்வேயர் கைது ; 3 பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவு!!!

பட்டியலினத்தை சேர்ந்தவர் என தெரிந்தவுடன், ‘உங்களுக்கு முடிவெட்ட முடியாது’ என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஏன் என்று கேட்டதற்கு ‘காலனி பசங்களுக்கு முடிவெட்ட முடியாது’ என கூறினாராம். இதையடுத்து. சஞ்சய் இது குறித்து தனது ஊரில் உள்ள இளைஞர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். பின்னர் இது குறித்து கேட்ட இளைஞர்கள், யோகேஷ் கடைக்கு சென்று முறையிட்டுள்ளனர்.

அப்போது அவரது தந்தை கருப்பன் மற்றும் மகன் யோகேஷ் ஆகிய இருவரும் பறையர்களுக்கு முடிவெட்டமுடியாது என சாதி பெயரை உச்சரித்து, இது காலம் காலமாக உள்ள வழக்கம் என கூறியுள்ளார். இச்சம்போதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலை வரும் நிலையில், இன்று இது குறித்து பாதிக்கப்பட்டவர் அரூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் அரூர் போலிசார் வழக்கு பதிவு செய்து தந்தை மகன் இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.

குறிப்பாக அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாதிய பிரச்சனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த விவகாரம், அதே போல் மாட்டு இறைச்சியை அரசு பேருந்தில் எடுத்துச் சென்றதால் மூதாட்டி ஒருவரை பாதி வழியில் காட்டுப்பகுதியில் இறக்கிச் சென்ற விவகாரம், தற்போது முடி திருத்தம் செய்வதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி திருத்தம் செய்ய முடியாது, என தொடர்ந்து சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் அரங்கேறி வருகிறது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!