அண்ணாச்சி வைத்த பார்ட்டி. குடித்து மயங்கி விழுந்த பிரபல நடிகை.. பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்.!
Author: Rajesh2 June 2022, 11:34 am
நடிகர் SK-உடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.
மேலும் ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார். ஆரம்பம் இவருக்கு அமோகமாக இருந்த போதிலும், இவர் கடந்த சில ஆண்டுகளாக நடித்த தமிழ் படங்கள் படு தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் நம்ம வீட்டு பொண்ணு போல இருக்கும் ஸ்ரீ திவ்யா, காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி, நிகழ்ச்சி ஒன்றில் சில நடிகர், நடிகைகளுக்கு பார்ட்டி வைத்தாராம் அதில், நடிகை ஸ்ரீதிவ்யாவும் ஒருவர், பார்ட்டியில் நடிகை ஸ்ரீதிவ்யா அளவுக்கு அதிகமாக குடித்து மயங்கி விட்டாராம். உடனே சக நடிகை நடிகர்கள் அவருக்கு தெளியவைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனராம் என அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.