ரோஹித்,கோலிக்கு பிசிசிஐ கெடுபிடி…பறந்து வந்த அதிரடி உத்தரவு…!

Author: Selvan
27 March 2025, 8:58 pm

சம்பளம் குறைப்பு காரணம் இதுதான்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான புதிய ஊதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மார்ச் 29ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்க: உண்மை இதுதான்..இன்ஸ்டாவில் நடிகை திடீர் போஸ்ட்..காட்டு தீயாய் பரவும் அந்தரங்க வீடியோ.!

இதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்,தேர்வுக் குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த சந்திப்பில் இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான டெஸ்ட் அணியின் கேப்டன்,வீரர்களின் சம்பளம் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

Virat Kohli Rohit Sharma salary cut

தற்போது இந்திய அணியில் A+, A, B, C என நான்கு பிரிவுகளில் ஊதியம் வழங்கப்படுகிறது. அதில் A+ பிரிவில் ரூ.7 கோடி,A பிரிவில் ரூ.5 கோடி, B பிரிவில் ரூ.3 கோடி,C பிரிவில் ரூ.1 கோடி வழங்கப்படுகிறது.

இப்போது A+ பிரிவில் இருக்கும் வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, மற்றும் பும்ரா உள்ளனர்.ஆனால்,விராட் கோலி,ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில்,அவர்கள் ஊதியத்தை குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டும் A+ பிரிவில் தொடர்ந்து நீடிப்பார் எனக் கூறப்படுகிறது.

மேலும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மான் கில் ஆகியோரை A+ பிரிவில் இடம் கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரேயாஸ் ஐயர், மற்றும் இஷான் கிஷன் A பிரிவில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் ரோஹித் மற்றும் கோலி உள்ளூர் போட்டிகளில் கட்டாயமாக விளையாட உத்தரவு வழங்கப்படும் என்ற தகவல் வந்துள்ளது.

  • Mohanlal Empuraan Controversy பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!
  • Leave a Reply