BDO அலுவலகத்தில் கூடிய ஒப்பந்ததாரர்கள்… திடீரென ஏற்பட்ட மின்வெட்டு ; செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் நடைபெற்ற அவலம்!!
Author: Babu Lakshmanan23 November 2023, 12:44 pm
தருமபுரி அருகே BDO அலுவலகத்தில் டெண்டர் நடைபெறும் போது மின்வெட்டு ஏற்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் நடைபெற்ற அவலம் அரங்கேறியுள்ளது.
பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா தலைமையில் 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், டெண்டர்கள் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.
மாலை 7 மணிக்கு இந்த டெண்டர் துவங்கிய சிறிது நேரத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, செல்போன் வெளிச்சத்தில் டெண்டர் பணிகள் நடைபெற்றது.
பென்னாகரம், ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக கடுமையான தொடர் மின்வெட்டு இருந்து வருகிறது. இதன் காரணமாக வர்த்தகர்களும், பொதுமக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வரும் சூழ்நிலையில், டெண்டரின் போது வட்டார வளர்ச்சி அலுவலகத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.