கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கரடி.. அழையா விருந்தாளியால் அச்சம் : ஷாக் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan9 October 2023, 11:11 am
கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கரடி.. அழையா விருந்தாளியால் அச்சம் : ஷாக் சிசிடிவி காட்சி!!
நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் அருகே ரோஸ்மியாபுரத்தில் கோவிலுக்குள் கரடி சுற்றித்திரிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த ஐந்தாம் தேதி இரவு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இடம்பெயர்ந்து வந்த கரடி ஒன்று ரோஸ்மியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சுடலை கோவிலுக்குள் புகுந்து உணவிற்காக அங்கு இங்குமாக அலைந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.
இதனை அடுத்து ஊருக்குள் சுற்றி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.