கோத்தகரியில் குட்டியை தோளில் சுமந்து கொண்டு சாலையில் ஒய்யார நடைபோட்ட கரடிகள்.. வைரலாகும் வீடியோ!!
Author: Babu Lakshmanan25 March 2023, 11:40 am
நீலகிரி : கோத்தகிரி சாலையில் இரண்டு குட்டிகளுடன் இரவில் கரடிகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக உலா வருகிறது.
இந்த நிலையில், கோத்தகிரியில் இருந்து பன்னீர் செல்லும் சாலையில் இரவில் சாலையில் குட்டியுடன் கரடி உலா வந்தது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வீடியோ எடுத்துள்ளனர். வனத்துறையினர் இரவு நேரங்களில் சாலைகளை சுற்றித்திரியும் கரடிகளை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.