பீஸ்டை சிம்பிளாக முந்திய கே.ஜி.எப்.. முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடிகளா..? அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!
Author: Rajesh14 April 2022, 7:01 pm
உலகம் முழுவதும் ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் ஸ்ரீநிதி ரெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த பிரமாண்ட திரைப்படமான கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று ரிலீசான தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மற்றும் இன்று ரிலீஸ் ஆன கேஜிஎஃப் 2 ஆகிய இரு திரைப்படமும் நேருக்கு நேர் மோதி, எது பின்னுக்குத் தள்ளப்படும் என்பதை அறிய சினிமா ஆர்வலர்கள் வெறிகொண்டு காத்திருந்தனர்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பீஸ்ட் படம் பெற்றுள்ளது. இந்த நிலையில், தான் இந்நிலையில், கே.ஜி.எப் 2 திரைப்படம் உலகளவில் சுமார் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 7 கோடியும், கேரளாவில் ரூ. 6 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ. 70 கோடி மேல் வசூல் செய்திருந்தாலும் கூட, கே.ஜி.எப் 2 திரைப்படம் அதனை அசால்ட்டாக முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்படி இருக்கும் இந்த சூழலில் ரிலீசான முதல் நாள் அன்றே, கேஜிஎஃப் 2 திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 300-க்கு மேற்பட்ட இடங்களில் ஸ்கிரீன்னிங் செய்து பீஸ்ட் திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி உள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் படத்திற்கு நிகராக தமிழக இடம் பிடிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.