“பீஸ்ட் பட நடிகையிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கிட்டாங்க” ட்டுவிட்டர் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்.!

Author: Rajesh
9 June 2022, 5:50 pm

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்தப் படம் தோல்வியடைந்ததால் அவருக்கு தமிழில் போதிய வாய்ப்புகள் அமையவில்லை.

தெலுங்கில் தடம் பதித்த அவர் தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகியாக வலம்வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அல்லு அர்ஜுனுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த அல வைக்குந்தபுரமுலோ வெளியாகி அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது.

குறிப்பாக அந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வெற்றிபெற்றது. அந்த ஒரு படத்தின் வெற்றியால் தென்னிந்திய அளவில் உருவான பெரிய நட்சத்திரங்களின் படங்களில் அவர் தான் நாயகியாக இருந்தார். நடிகர் விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் தான் இண்டிகோ விமானத்தில் பயணித்ததாகவும், அங்கு பணியிலிருந்த ஊழியர் ஒருவர் தன்னிடம் திமிராக நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டினார். அவரது பதிவுக்கு இண்டிகோ நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!