50 நாட்களை கடந்த Beast & KGF-2 .. வசூலில் எவ்வளவு வித்தியாசம் பாருங்க.!
Author: Rajesh2 June 2022, 7:53 pm
பீஸ்ட் மற்றும் கேஜிஎப் சாப்டர் 2 படங்கள் கடந்த தமிழ் புத்தாண்டையொட்டி திரையரங்குகளில் வெளியாகின. அடுத்தடுத்த தினங்களில் வெளியான இந்தப் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வித்தியாசப்பட்டுள்ளன. தற்போது இரு படங்களும் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்துள்ளன. மேலும் ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் விஜய்யின் பீஸ்ட் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும் இந்த படம் ரூபாய் 200 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் 50 நாட்களை திரையரங்குகளில் கடந்துள்ளது.
இதேபோல யஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேஜிஎப் சாப்டர் 2. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து, இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்தப் படம் சில நாட்களிலேயே சர்வதேச அளவில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டியது. தொடர்ந்து இந்தப் படம் ஓடிடியில் ரிலீசான நிலையிலும் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது.
தமிழகத்தில் மட்டும் பீஸ்ட் படம் 120 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை செய்துள்ளது. கேஜிஎப் 2 தமிழகத்தில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியான நிலையில் விமர்சனங்களிலும் வசூலிலும் இந்தப் படங்களுக்கிடையில் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.