வசூலில் பின்தங்குமா பீஸ்ட்.? குவைத் நாட்டைத் தொடர்ந்து மற்றொரு நாட்டில் தடை ..!
Author: Rajesh10 April 2022, 2:24 pm
விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்தப்படம் தான் விஜய்யின் முதல் பான் – இந்திய திரைப்படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்தில் இவர்களுடன் ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இதனிடையே பீஸ்ட் படம் குறித்த ரசிக்கர்களின் எதிர்ப்பார்ப்பு எகிறி வருகிறது. அதற்கு ஏற்றது போல தயாரிப்பு நிறுவனமும் அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தயாரிப்பு நிறுவனம் குஷிப்படுத்தி வருகிறது.
இந்த திரைப்படம், சோல்ஜராக இருக்கும் வீரராகவன் (விஜய்) தீவிரவாதிகள் ஹைஜெக் செய்த மாலில் இருக்கிறார். நஜிக்கு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மக்களை எவ்வாறு போராடி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மையக்கருவாக இருக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் பீஸ்ட் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லரில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக கூறி ஏற்கனவே குவைத் நாட்டில் இந்தப்படம் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கத்தார் நாட்டிலும் பீஸ்ட் படத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
பீஸ்ட் படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இந்த சிக்கலை எப்படி கையாள்வது என தெரியாமல் படக்குழு விழிபிதுங்கி நிற்கிறது.
இதனால் படக்குழுவினர் எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.