BEAST படத்தின் விஜய்யின் கதாபாத்திரம் பற்றிய அப்டேட் ரிலீஸ்… அப்போ கன்ஃபார்ம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்…!!
Author: Babu Lakshmanan1 April 2022, 4:24 pm
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்துள்ள படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ள நிலையில், அரபிக் குத்து மற்றும் விஜய் குரலில் இடம்பெற்றுள்ள ஜாலியானா ஜிம்கானா பாடல்களும் சக்கை போடு போட்டு வருகின்றன.
படத்தின் ப்ரோமா பாடல்களில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கட்டாயம், பீஸ்ட் இயக்குநர் நெல்சனின் முந்தைய படமான டாக்டர் படத்தைப் போன்று நகைச்சுவையாக இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
அதேவேளையில், இப்படத்தின் கதை குறித்து தகவல் அண்மையில் வெளியாகியது. அதன்படி, மக்கள் அதிகளவில் கூடும் பிரபல ஷாப்பிங் மால் ஒன்றை தீவீரவாதிகள் கைப்பற்றி விடுகிறார்களாம். அதிலிருந்து மக்களை, தீவீரவாதிகளிடம் இருந்து விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் பீஸ்ட் படத்தின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் இதற்கு முன்பு தான் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தை போதைப் பொருள் கடத்தலையும், சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டாக்டர் படம் குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து இயக்கிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியிருக்கையில், அவர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சிகரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் வீரராகவன் என்றும், அவரை படத்தில் வீரா என அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பீஸ்ட் படத்தில் விஜய் ரா ஏஜெண்ட்டாக நடித்திருப்பது கூடுதல் அப்டேட் ஆகும். துப்பாக்கி படத்தில் ராணுவ வீரராக இருந்த நடிகர் விஜய், அந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தெறிக்கவிட்டார்.
அதேபோன்று, இந்தப் படத்திலும் ஒவ்வொரு கட்சிகளும் அனல் பறக்கும் என்று நம்பப்படுகிறது.