ஓ, இது தான் ‘திரை தீப்பிடிக்குமா’ … பீஸ்ட் படத்தை பார்த்து ரசிகர்கள் கோபம்… திரையரங்கில் ஸ்கிரீனை கொளுத்தி ஆத்திரம்..!! வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
13 April 2022, 4:44 pm

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை படத்தில் நெல்சன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ்,யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தனது 65வது படத்தை நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. காஷ்மீர் எல்லையில் பல நாட்கள் இருந்து அங்கிருக்கும் முக்கிய புள்ளியை சிறைபிடிக்க திட்டம் போடுகிறார் வீரராகவன் விஜய். ஆனால், அதை கைவிடும்படி விஜய்க்கு ஆர்டர் வருகிறது. இருந்தாலும் அதையும் மீறி அங்கு இருக்கும் தீவிரவாதிகளை துவம்சம் செய்கிறார். பின் விஜய் சென்னைக்கு வருகிறார். சென்னையில் விஜய்க்கு பூஜாவுடன் காதல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஒரு நாள் பூஜாவுடன் விஜய் வேலை சம்பந்தமாக மாலுக்கு வருகிறார். அங்கு திடீரென பாகிஸ்தான் தீவிரவாதிகள் மாலை ஹைஜாக் செய்கிறார்கள். பின் வீரராகவன் கைது செய்த அந்த முக்கிய புள்ளியை விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர். மேலும், மாலில் விஜயும் உள்ளார் என்பது போலீசுக்கு தெரியவருகிறது. கடைசியில் விஜய் மக்களை எப்படி தீவிரவாத கும்பலில் இருந்து காப்பாற்றினார்? அந்த தீவிரவாத தலைவன் விடுவிக்கப்பட்டானா? என்பது தான் படத்தின் கதை.

இந்தப் படத்தில் விஜய்யின் காட்சிகள் வெயிட்டாக இருந்தாலும், படத்தில் தீவிரவாதிகளை ரொம்பவே வீக்காக காண்பித்துள்ளார்கள். இதனால் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பில்லாமல் போய் விடுகிறது. முதல் பாதி காமெடி, ஆக்சன் என நெல்சன் ஸ்டைலில் கொண்டு சென்றாலும் இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு சலிப்பு தட்டும் வகையில் உள்ளது.

கோகோ, டாக்டர் உள்ளிட்ட படங்களைத் இயக்கிய நெல்சன் பீஸ்ட் படத்தில் புது மாற்றத்தை காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். இதுவரை வெளிவந்த விஜய் படங்களில் பீஸ்ட் படம் வித்தியாசமாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கைக்கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். மேலும், கூர்கா படத்தோடு ஒப்பிடுகையில், அதில் கூட காமெடி இருந்தது. ஆனால், இதில் வெறும் ஆக்ஷன் என்ற பெயரில் உப்பு சப்பில்லாத வகையில் எடுத்து வைத்துள்ளார் நெல்சன் என்று படம் பார்ப்பவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பீஸ்ட் படம் குறித்து விமர்சித்து பயங்கரமான கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.

உச்சகட்டமாக, மதுரை மேலூரில் உள்ள கணேஷ் காம்ப்ளக்ஸில் திரையரங்கிற்கு விஜய் ரசிகர்கள் நெருப்பு வைத்து இருக்கிறார்கள். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வலிமை படத்திற்கு இணையாக பீஸ்ட் படம் வசூலில் சாதனை செய்யுமா? என்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு படம் ரசிகர்களுக்கு பயங்கர அதிருப்தியை கொடுத்து இருக்கிறது.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!