ராக்கி பாயை தாக்குபிடிக்குமா பீஸ்ட் : தெறிக்க விடப் போகும் பஞ்ச் டயலாக்.. நாளைக்கு ஷோசியல் மீடியாவே அதிரப் போகுது!!
Author: Udayachandran RadhaKrishnan26 March 2022, 7:29 pm
மாஸ்டர் படத்திற்கு பிறகு டாக்டர் பட இயக்குநர் நெல்சனுடன் இணைந்துள்ளார் நடிகர் விஜய். சன்பிக்சர்ஸ் தயாரிப்பு, விஜய்யுடன் ஜோடி சேரும் புதுமுகங்கள் என பெரிய எதிர்பார்ப்பே படத்திற்கு எகிறியுள்ளது.
படத்தின் போஸ்டர், இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளன. குறிப்பாக அரபிக் குத்து பாடல் அகிலமே பாராட்டும் அளவுக்கு அமைந்துள்ளது. மேலும் அந்த பாடலுக்கு சினிமா, விளையாட்டு என அனைத்து பிரபலங்களுமே ரீல்ஸ் செய்யும் அளவுக்கு ட்ரெண்டாகியுள்ளது.

வரும் ஏப்ரல் 13ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் PAN INDIA மூவியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் தாண்டி படத்தின் வெற்றியை தடுக்கும் முனைப்பில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்பில் உள்ள KGF 2 படம் வெளியாக உள்ளது.

ஏற்கனவே KGF முதல் பாகம் வெளியாகி வசூலை வாரி குவித்தது மட்டுமல்லாமல், இந்தியாவே திரும்பி பார்க்க வைத்தது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ஆக்ஷன் ரசிகர்களுக்கிடையே பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே நாளை வெளியாகிறது.
ட்ரெய்லர் வெளியாக உள்ளதால் யாஷ் ரசிகர்கள் தீவிர ஆர்வமாக உள்ளனர். சமூக வலைதளங்களில் நாளை அதிரப்போகும் அளவுக்கு பெரிய ட்ரீட் அவர்களுக்கு காத்துள்ளது. இந்த நிலையில் இரு படடும் ஒரு நாள் வித்தியாசத்தில் வெளியாக உள்ளது விஜய் ரசிகர்களிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.