பீஃப் FRYஆ? பல்லி FRYஆ? பீஃப் இறைச்சியில் இறந்து கிடந்த பல்லி… பிரபல ஹோட்டலில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2024, 4:32 pm

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஐயூப் கான் ,இவர் அதே பகுதியில் பதிரியா என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் ஹோட்டல் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான மக்கள் சாப்பிட வருவார்கள்.

இந்த நிலையில் பளுகல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வரும் புவநேந்திரன் மார்த்தாண்டம் காவலர் குடியிருப்பில் குடும்பத்தோடு தங்கி உள்ளார்.

தனது மகன் ரோகித்திடம் இரவு சாப்பிட மாட்டு இறைச்சி ப்றை வாங்க 100 ரூபாய் பணம் கொடுத்து விட்டார்,ரோகித்தும் பதிரியா ஹோட்டலில் சென்று 100 ரூபாய் கொடுத்து மாட்டு இறைச்சி ப்றை வாங்கி விட்டு மார்த்தாண்டம் காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள குடியிருப்பிற்கு வந்துள்ளார்.

பின்னர் தந்தையும் மகனும் சாப்பிட பார்சலை பிரித்த போது அதில் இறைச்சியுடன் வால் முறிந்த நிலையில் இறந்த பல்லியும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இறைச்சியுடன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ரோகித் புகார் அளித்தார், புகாரின்பேரில் இறைச்சியை வாங்கி பார்த்த போலீசாரும் ஆத்திரம் அடைந்த நிலையில் போலிசார் உடனே உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் விரைந்து வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கிளாட்சன் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்களை வெளியேற்றி விட்டு இறைச்சியை பரிசோதனை செய்தார். பரிசோதனையில் சந்தேகம் இருந்ததால் மேலும் பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.

தொடர்ந்து மார்த்தாண்டம் காவல் நிலைய போலிசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டல்களில் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே வேளையில் மக்களின் பாதுகாப்பு கருதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் ஹோட்டல்களில் தீவிர பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Vidamuyarchi OTT release announcement ரசிகர்ளுக்கு பொங்கல் பரிசு கொடுத்த லைக்கா…விடாமுயற்சி படத்தின் OTT-உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்…