பிச்சை எடுத்து ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்… ஓய்வூதிய பலன்களை கேட்டு அரசின் கவனம் பெற நூதனம்!!

Author: Babu Lakshmanan
29 December 2022, 6:11 pm

சென்னை ; ஓய்வூதிய பலன்களை கேட்டு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.

நீதிமன்ற ஆணையின்படி, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல், கொரோனா நிவாரண தொகை, ஒப்பந்த நிலுவை தொகைகளையும் வழங்க வேண்டும் என்று வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இதையொட்டி, பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டது.

இதன் ஒருபகுதியாக, ஓய்வூதிய பலன்களை கேட்டு, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ