‘ழ’கரம் ஏந்திய தமிழணங்கு புகைப்படம்: ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்டிற்கு இதுதான் காரணமா?…தெறிக்கவிடும் நெட்டிசன்கள்..!!

Author: Rajesh
9 April 2022, 1:30 pm

சென்னை: ‘ழ’கரம் ஏந்திய தமிழணங்கு என்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற கவிதையில் வரும், ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளை ஏ.ஆர்.ரகுமான் சுட்டிக்காட்டி பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.

Image

இதுதொடர்பாக தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோ ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டிருக்கிறார். அதில் ‘ழ’ கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே ‘தமிழணங்கு’ என்றும், புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

நேற்று நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37வது கூட்டம் அதன் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, இந்தி மொழியை வளர்ப்பது குறித்து விளக்கினார். இது தொடர்பாக பேசிய அவர், நாட்டின் ஒற்றுமையின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

பிற மொழிகளை பேசும் மாநில குடிமக்கள் தங்களுக்குள்ளே உரையாடும் மொழி, இந்திய மொழியாகவே இருக்க வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும், மாறாக உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாவிட்டால், அது பரவாது. மத்திய மந்திரி சபையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல்கள் தற்போது இந்தியில்தான் தயாரிக்கப்படுகின்றன.

8 வடகிழக்கு மாநிலங்களும், தங்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்க ஒப்புக்கொண்டு உள்ளன என்று அமித்ஷா தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாகவே, ஏஆர் ரகுமான் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளனர். மேலும், இது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

  • sun pictures released the announcement of magnum opus which is atlee allu arjun project சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?