காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் : ஆத்திரத்தில் வீடு புகுந்து காதலன் செய்த கொடூர சம்பவம்… மதுரை அருகே பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 7:40 pm

மதுரை : காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயகிக்கப்பட்ட ஆத்திரத்தில் காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற நபர் பொன்மேனி பகுதியை சேர்ந்த அபர்ணா (வயது 19) என்ற பெண்ணை காதலித்துள்ளார். இந்த நிலையில் வீட்டிற்கு வந்து பெண் கேட்டுள்ளார். பெண் வீட்டார் பெண் தர மறுத்துள்ளனர்.

பெண்ணிற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஆத்திரமுற்ற ஹரிஹரன் வீட்டில் தனியாக இருந்த அபர்ணாவை கழுத்தை எடுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.

தொடர்ந்து சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 822

    0

    0