பெங்களூரூ குண்டுவெடிப்பில் தொடர்பா..? தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வீட்டில் என்ஐஏ திடீர் ரெய்டு… கோவையில் பரபரப்பு
Author: Babu Lakshmanan21 May 2024, 12:53 pm
பெங்களூரில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் தனியார் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் இருவர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை, சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் நஹீம் மற்றும் ஜாபர் இக்பால் ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதலே என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர்கள் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் காபி வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
மேலும், பெங்களூரில் அல்கொய்தா வழக்கில் இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஐந்து வருடங்கள் சிறைக்கு அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் கோவை சாய்பாபா காலனி பகுதி வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணி புரிந்து வந்தனர்.
மேலும் படிக்க: மக்களின் உயிரோடு விளையாடாதீங்க… போக்குவரத்துத் துறையையே காவு வாங்கும் CM ஸ்டாலின் ; இபிஎஸ் கொந்தளிப்பு
இந்த நிலையில், இவர்களுக்கு பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் வீடுகளில் அதற்கான ஆவணங்கள் இருக்கின்றதா..? என என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.