குக் வித் கோமாளியை அடுத்து ‘பிக்பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சியில் களமிறங்கும் சின்னத்திரை பிரபலம்.. இனி அவங்க ரேஞ்சே வேற..!

Author: Vignesh
27 September 2022, 8:30 pm

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் கலந்து கொள்கிறார் என்று பேசப்படுகிறது.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 9ம் தேதி துவங்கும் என்று கூறப்படுகிறது. முந்தைய சீசன்களை போன்றே இந்த சீசனையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். அவருக்கு எத்தனை கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

பிக் பாஸ் 6 வீட்டிற்கு பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஹரிப்ரியன் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடந்ததை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டார்கள். அந்த சீரியல் போன்று பிக் பாஸ் வீட்டிலும் நடப்பாரா என்கிறார்கள் பார்வையாளர்கள்.

Roshini-Updatenews360 (11)

முந்தைய சீசன்கள் எப்படியோ ஆனால் இந்த சீசனில் நிச்சயமாக டிடி அக்கா கலந்து கொள்கிறார் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். arthritis பிரச்சனையால் அவதிப்படும் டிடி எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுந்துள்ளது.

கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் டான்ஸ் மாஸ்டரான ராபர்ட், பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகிவிட்டதாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் அவரை பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆட வைக்கும் ஐடியாவில் தான் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ