தமிழ் தாய் வாழ்த்து பாடலின் ஒரு வரியை மாற்ற வேண்டும் : தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா விடுத்த கோரிக்கை!!

Author: Babu Lakshmanan
4 February 2023, 10:37 am

தமிழ் தாய் வாழ்த்து பாடலில் ஒரு லைனை மாற்ற வேண்டும் என்றும் இயக்குநர் பாரதி ராஜா தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நட்டலாம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் கலை, இலக்கிய விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இயக்குநர் பாரதி ராஜா பேசும் போது :- தமிழ் தாய் வாழ்த்து பாடுவதில் எனக்கு சின்ன ஒரு வருத்தம் உள்ளது. எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழிணங்கே என்கிற போது, ஏற்கனவே இருந்த தமிழ் தற்போது எத்தி செய்யும் புகழ் மணக்க இருந்த தமிழ் இப்போ இல்லையா..? என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் :- எத்தி செய்யும் புகழ் மணக்க இருக்கின்ற தமிழே என மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், நான் கையை தலைமீது உயர்த்தி கும்பிடுவது என்பது எனக்கு அது தான் அடையாளம் எனவும், இதற்கும் காரணம் உண்டு. தமிழக கோவில் கோபுரங்கள் அப்படி தான் இருக்கும். நீங்கள் என் கோவில் போன்றோர்கள் என் இனிய தமிழ் மக்களே, அது தான் அப்படி வணங்குகிறேன், எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…