பவதாரணி மறைவு… இளையராஜாவுக்கு போன் போட்டு உருக்கமாக பேசிய ரஜினி..!!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2024, 5:22 pm

பவதாரணி மறைவு… இளையராஜாவுக்கு போன் போட்டு உருக்கமாக பேசிய ரஜினி..!!

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார்.

இதனையடுத்து, பாடகி பவதாரிணியின் உடலை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக சகோதரர் யுவன் சங்கர் ராஜா இலங்கை இன்று காலை புறப்பட்டார். இந்த நிலையில், பவதாரிணி உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.

பவதாரிணி உடல் அஞ்சலிக்காக தியாகராய நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை அஞ்சலிக்கு வைக்கப்படும் எனவும், அதன்பிறகு அவருடைய உடல் தேனிக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், இவருடைய மறைவுக்கு சிம்பு, இயக்குனர் பாரதி ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கவின், கமல்ஹாசன், உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

அவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இளையராஜாவின் மகள் பவதாரணி மறைவு வருத்தமளிக்கிறது. அவருடைய இழப்பு வேதனையை அளிக்கிறது. இளையராஜாவை தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் தெரிவித்தேன். நாளை அவரை நேரில் சந்திக்கவுள்ளேன்” எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 2624

    0

    0