இது புது கண்டுபிடிப்பு இல்ல.. ஆடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பாவனா..!

Author: Vignesh
28 September 2022, 3:27 pm

உடையால் ஏற்பட்ட சர்ச்சைக்கு பாவனா கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் அவர்கள் கூலிப் படையை ஏவி விட்டு பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது.

இது அனைவருக்கும் தெரிந்த அன்று. மேலும், இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் அவர்களை போலீஸ் கைது செய்து இருந்தது. இதற்காக இவர் 85 நாள்கள் சிறையில் இருந்து கடந்த ஆண்டு தான் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார். இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. இப்படி ஒரு நிலையில் திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திரகுமார் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு திலீப் மீது எஃப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டு மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு சென்று கொண்டு இருக்கிறது. இருந்தும் பாவனா மன உறுதியோடு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களிலும், விளம்பரங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பாவனா மலையாளத்தில் ‘என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்து இருக்கிறது. படத்தின் ரிலீஸுக்காக பாவனா காத்துக் கொண்டிருக்கின்றார்.

இப்படி ஒரு சூழ்நிலையில் பாவனாவுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அவர்கள் கோல்டன் விசா வழங்கி இருக்கிறது. இந்த விழாவில் நடிகை பாவனா கலந்து கொண்டு கோல்டன் விசாவை பெற்று இருக்கிறார். மேலும், இவர் அணிந்திருந்த ஆடை தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரோல் ஆகி வருகிறது. பாவனா அணிந்த ஆடைக்குள்ளே எந்த உடையும் அணியவில்லை என்றெல்லாம் பலர் விமர்சித்து கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாவனா அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றைப் போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியது, “எனது அன்புக்குரியவர்கள் காயமடையாமல் இருக்கவும், ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்றும் நான் முயற்சித்து கொண்டிருக்கும்போது ​​எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிப்பவர்கள் இருப்பதை அறியும்போது எனக்கு வேதனை அளிக்கிறது.

இதுபோன்ற செயல்கள் மூலம் தான் அவர்கள் சந்தோசம் காண விரும்பினால் நான் அவர்களைத் தடுக்கவில்லை என்று மன வேதனையுடன் பாவனா கூறி இருக்கிறார். மேலும், கை உயர்த்தும்போது தெரிந்தது உடல் அல்ல. அந்த உடையில் டாப்புடன் ஸ்லிப் என்ற பகுதியும் சேர்ந்துதான் வருகிறது. ஸ்லிப் என்பது உடலின் நிறத்தில் உடலுடன் சேர்ந்து இருக்கும் டாப்பின் ஒரு பகுதிதான். இது புதிய கண்டுபிடிப்பு ஒன்றும் இல்லை. அந்த ஆடையை பயன்படுத்தியவர்களுக்கு அது தெரியும். டாப் மட்டும் அணிந்துகொண்டு வெளியே போகும் நபர் அல்ல நான். எது கிடைத்தாலும் அதை வைத்து என்னை வேதனைப்படுத்தும் சிலர் உள்ளனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?