பவானிசாகர் மாயாற்றில் முதலை நடமாட்டம்… படகில் சென்ற கிராம மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வனத்துறையினர் எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
24 January 2023, 5:44 pm
Quick Share

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே உள்ள மாயாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வன சரகங்கள் உள்ளன. இதில் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா பகுதியில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான மாயாற்றினை கடந்து தான் கல்லாம்பாளையம், தெங்குமரஹாடா உள்ளிட்ட கிராமங்களுக்கு பரிசலில் செல்ல முடியும்.

இந்நிலையில் நேற்று கல்லாம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சிலர் ஆற்றைக் கடக்கும் போது அங்கு பெரிய முதலை ஒன்று படுத்து இருப்பதை கண்டவுடன் அதிர்ச்சியடைந்து முதலையை தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர்.

பிறகு முதலை சிறிது நேரம் கழித்து மாயாற்றில் இறங்கி சென்றது. இதனால், தெங்குமரகாடா மற்றும் கல்லம்பாளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த ஆற்றின் கரையோரப்பகுதிகளில் செல்லும் போது கவனத்துடன் இருக்க வேண்டுமெனவும், ஆற்றில் நீண்ட நேரம் குளிக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  • sivakarthikeyan-updatenews360அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் – செம லவ்வா இருக்கே – வீடியோ!
  • Views: - 456

    0

    0