நடிகர் விஜய்க்கு பெரிய ரிலீப் : சொகுசு கார் நுழைவு வரி வழக்கில் புதிய திருப்பம்.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2022, 11:46 am

நடிகர் விஜய் இறக்குமதி காருக்கு 2019 முன் முழு நுழைவரியை செலுத்தி இருந்தால் விஜய்க்கு அபராதம் விதிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த ரூ.63 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 காருக்கு வரி செலுத்துமாறு வணிகவரித்துறை உத்தரவிட்டிருந்தது.

இதனைஎடுத்து, உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த வருடம் டிசம்பர் மாதம் வணிகவரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவு எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் விஜய் தரப்பில் கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும், ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் வணிகத்துறை , இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் விஜய் இறக்குமதி காருக்கு 2019 முன் முழு நுழைவரியை செலுத்தி இருந்தால் விஜய்க்கு அபராதம் விதிக்க கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டு காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என விஜய் நடிகர் விஜய் மீது தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 623

    0

    0