என்னை அரசியலுக்குள் இழுக்காதீங்க.. உங்களால் என்னை சமாளிக்க முடியாது : முதலமைச்ர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நடிகர்..!!

Author: Babu Lakshmanan
27 March 2023, 3:26 pm

தேவையில்லாமல் என்னை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரபல நடிகர் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவது ஒன்றாகும். ஆனால், இதற்கு நேர்மாறான நடவடிக்கைகளிலேயே தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக எதிர்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும், நடந்த வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க திமுக அரசு இலக்கு நிர்ணயம் செய்திருப்பது கடும் விமர்சனங்களை எழச் செய்துள்ளது.

இந்த நிலையில், தேவையில்லாமல் என்னை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரபல நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். டாஸ்மாக்கால் நிறைய உயிர்கள் பறிபோயுள்ளன. ஆன்லைன் ரம்மியை ஒப்பிடும்போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம். மதுவினால் என்னை போன்ற பலர் அனாதையாக மாறியுள்ளனர். என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள். உங்களால் என்னை சமாளிக்க முடியாது, என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 347

    0

    0