பிக்பாஸ் சீசன்-6, தொகுத்து வழங்க போவதாக யார்.? வெளியான தகவல்.!

Author: Rajesh
19 June 2022, 4:56 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களை தொகுத்து வழங்கியவர் கமல்ஹாசன். அதனை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியையும் முதல் மூன்று வாரங்கள் கமலஹாசனே தொகுத்து வழங்கினார்.
அதையடுத்து அவர் விக்ரம் படப்பிடிப்புக்காக சென்றுவிட்டதால், சிம்பு தொகுப்பாளராக தொடர்ந்தார்.

தற்போது கமல் நடித்து வந்த விக்ரம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறார். இந்தநிலையில் பிக்பாஸ் ஆறாவது சீசனையும் கமல்ஹாசனை தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அக்டோபர் 2ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 6 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. அதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடிய போட்டியாளர்களை தேர்வு செய்ய தொடங்கி விட்டதாகவும் விஜய் டிவி வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!