‘இங்கு ஒன்னும் அங்கு ஒன்னுமாக பேச மாட்டேன்’ – பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் ‘பாவம் கணேசன்’ சீரியல் பிரபலம்..!

Author: Vignesh
26 September 2022, 4:44 pm

பாவம் கணேசன் சீரியல் நடிகை நேஹா கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பல்வேறு திருப்பங்களுடன் சென்றிருக்கும் தொடர் தான் பாவம் கணேசன். இந்த தொடரில் கணேசன் கதாபாத்திரத்தில் நவீன், குணவதி கதாபாத்திரத்தில் நடிகை நேகா கவுடா நடித்து வருகிறார்.

மேலும், குணவதி-கணேசன் கல்யாணம் செய்து கொண்ட பிறகு சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நேகா. இவர் பெங்களூரை சேர்ந்தவர். இவருடைய அப்பா கன்னட சினிமாவில் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், நேகா அவர்கள் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட சீரியல் மூலம் தான் அறிமுகமானார்.

நேகாவின் சின்னத்திரைப்பயணம்:

அதற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு தொடரில் நடித்து இவர் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். பின் இவர் 2018 ஆம் ஆண்டு சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் முழுக்க முழுக்க காதல் திருமணம். இவர்களுடைய காதல் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தொடங்கியது. பின் ஸ்கூல், காலேஜ் என்று தொடங்கிய இவர்கள் காதல் இறுதியில் கல்யாணத்தில் முடிந்தது.

திருமணத்திற்கு பிறகும் கணவரின் சம்மதத்துடன் நேகா நடிப்பைத் தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கன்னட கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி ரியாலிட்டி ஷோவில் இருவரும் பங்கு பெற்று இருந்தார்கள். இந்த நிலையில் நடிகை நேகா கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிக் பாஸ் கன்னட சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

நேகா வெளியிட்ட வீடியோ:

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக நேகா களமிறங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு இது குறித்து நேகா வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பல அழகான நினைவுகளை பிக் பாஸ் வீட்டுக்குள் சேகரிக்க போகிறேன். திரிச்சி பேசும் பழக்கம் எல்லாம் எனக்கு கிடையாது. நெகட்டிவாகவோ, அநாவசியமாகவோ யாரிடமும் பேச மாட்டேன்.

வாழ்த்துக்களை தெரிவிக்கும் ரசிகர்கள் :

இங்கு ஒன்னும் அங்கு ஒன்னுமாக பேச மாட்டேன் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல போகிற தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடரந்து ரசிகர்கள் பலரும் நேகாவிற்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் சீரியலில் சாந்தமாக நடிக்கும் நேகா பிக் பாஸ் வீட்டில் எப்படி இருக்கிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu