மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணி 221 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பாலான இடங்களை பிடிக்க உள்ளதோடு, இண்டியா கூட்டணி வெறும் 51 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும், நடிகரும், அரசியல்வாதியுமான அஜாஸ் கான், ஆஸாத் சமாஜ் கட்சியின் சார்பில் வெர்சோவா தொகுதியில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் மொத்தம் 16 பேர் போட்டியிட்டனர். ஆனால், அஜாஸ் கான் வெறும் 155 ஓட்டுகள் மட்டுமே பெற்று பெரும் தோல்வி அடைந்தார்.
இதையும் படியுங்க: சிவகார்த்திகேயனுடன் நேருக்கு நேர் போட்டி… சவால் விட்டு சொல்லி அடித்த நடிகை!
வெர்சோவா தொகுதியில், சிவசேனாவின் ஹரூன் கான் 65,396 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். அவரை விட 1,600 ஓட்டுகள் குறைவாக பா.ஜ.க வேட்பாளர் பாரதி லவேகர் 63,796 ஓட்டுகள் பெற்றார். தன்னிச்சையான வாக்குகளுக்கான நோட்டா 1,298 ஓட்டுகளை பெற்றது, இது அஜாஸ் கான் பெற்ற ஓட்டுகளுக்கு ஆறு மடங்கு அதிகமாகும்.
இன்ஸ்டாகிராமில் 56 லட்சம் பின்தொடர்பாளர்கள் கொண்டுள்ள அஜாஸ் கான், தனது ரசிகர்கள் ஆதரவை ஓட்டுகளாக மாற்றுவார் என நம்பியிருந்தார். ஆனால், அவரது நம்பிக்கை தோல்வியடைந்ததை நெட்டிசன்கள் கிண்டலடித்து, மீம்ஸ்களாக பரப்பி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
This website uses cookies.