கல்யாணம் செய்ய போகிறார்களா பிக்பாஸ் பிரபலங்கள்.? ஆங்கர் பிரியங்கா வெளியிட்ட வீடியோ..!

Author: Rajesh
8 May 2022, 10:59 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக கிசுகிசுக்கப்படுபவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர். நடிகை பாவனி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

இந்த சீரியலுக்கு பின் சில காலம் கழித்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும், தற்போது பாவனி – அமீர் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆட உள்ளார்.

இந்நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளினி பிரியங்கா எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பாவனி – அமீர் இருவரிடம் கேள்வி கேட்ட பிரியங்கா ‘ நிகழ்ச்சி முடியும் பொழுது கல்யாணமா ‘ என்று கேட்டுள்ளார். அதற்கு பாவனி ‘இல்ல Friendship Band கட்ட போறேன் ‘ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • High Court Orders Sivaji Ganesan House Auction நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?