ஆரம்பிக்கலாமா.. பிக்பாஸ் சீசன் 6-யை தொகுத்து வழங்கப் போவது ஒருவரா அல்லது இருவரா? வெளியான மாஸ் அப்டேட்.!
Author: Rajesh24 June 2022, 7:29 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
கடந்த 5 சீசன்களாக வெற்றி கண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, தொடர்ந்து டிஸ்னி ஹாட் பிளஸில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புது முயற்சியை எடுத்து அதிலும் வெற்றி கண்டனர்.
அந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் பாதியில் இருந்து தொகுத்து வழங்கியவர் நடிகர் சிம்பு. இதனால் மேலும் அந்த நிகழ்ச்சி சூடுபிடித்தது. கமல் இருந்த இடத்தில் வேறு யார் வந்தாலும் சரி வராது என எண்ணிய மக்களின் எண்ணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார் சிம்பு. கமலுக்கு இணையாக அதே உத்வேகத்துடன் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வெற்றி கண்டார். இந்த நிலையில் விக்ரம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த உலகநாயகன் கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் நிலையிலும் பிக்பாஸ் சீசன் 6 யை எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என பயம் எல்லோருக்கும் இருந்தது.
வாரத்திற்கு இரண்டு நாள்கள் வரும் அவர் அந்த இரண்டு நாள்களுமே பிஸியாக தான் இருப்பார் என தெரிகிறது. சீசன் 6 ஐ யார் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமலும் சிம்புவுமே சேர்ந்து நடத்த போவதாக தெரிகிறது. எந்த மாதிரியான செடியூலில் வர போகிறார்கள் என தெரியவில்லை. ஆனால் இந்த செய்திதான் இப்பொழுது வைரலாகி வருகிறது.