BIGG BOSS அல்டிமேட்டில் அப்ளாஸ் அள்ளும் பாலாஜி முருகதாஸ்..!

Author: Babu Lakshmanan
5 February 2022, 1:32 pm

பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் நடைபெறும் கேப்டன் டாஸ்க்கிலும் ஆர்க்யூமென்ட்ஸ் அனல் பறந்து வருகிறது. இதில் பாலாஜி முருகதாஸ் வெற்றிப்பெறுவார் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மிஸ்டர் இந்தியா, மாடல், இன்புளுயன்சர், நடிகர் என பல்துறை வித்தகராக பாலாஜி முருகதாஸ் இருந்தாலும், பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டதன் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது இவர் வெளிப்படுத்திய ஸ்டைல் மற்றும் அழகு, வெளிப்படையான அணுகுமுறை தமிழக தொலைக்காட்சி குறிப்பாக பெண் ரசிகர்களை பாலாஜி முருகதாஸ் பெரிதும் ஈர்க்க காரணமானது.

பிக் பாஸ் சீசன் 4-ல் பாலாஜி முருகதாஸ் இரண்டாமிடம் பெற்றார். பிக் பாஸ் சீசன் 4-ல் சண்டைகள், சர்ச்சைகள் மற்றும் ரொமேன்ஸ் என கலந்து கட்டி கொண்டு சென்றதற்கு முக்கிய காரணமும் பாலாஜி முருகதாஸ் தான்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமான பிக்பாஸ் அல்டிமேட் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 14 போட்டியாளர்களில் ஒருவராக பாலாஜி முருகதாஸூம் கலந்துக் கொண்டுள்ளார்.

போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து தங்கள் வண்டவாளங்களை அவர்களே தண்டவாளம் ஏற்றினர். அடுத்த படியாக போட்டியாளர்கள் செய்தியாளர்களாக மாறி கேள்வி கேட்கும் சுற்று இடம்பெற்றிருந்தது. அதில், பதில் முடிவு செய்த பின்பு கேள்வி கேட்பதாக கோபப்பட்டார் நிரூப். அவருக்கு எதிராக அபிராமி, அனிதா, சுரேஷ் என பலரும் கருத்துகளை தெரிவித்தனர்.

பாலா அமைதியானவரா அல்லது திமிர்பிடித்தவரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இரண்டும் இல்லை என பதிலளித்த அவர், என்றும் பாலா பாலா தான் என்றார். நான் கேப்டனாக இருந்தால், அம்மிக்கல்லில் அரைக்க வைப்பேன் என பாலா சொன்னதை, சுரேஷ் திமிர் பிடித்த குணம் என்றும் கோவத்தின் வெளிப்பாடு என்றும் தெரிவித்தார். முன்னோர்கள் பயன்படுத்தியதை சொன்னதால் எந்த பிரச்சனையும் இல்லை என பதிலடி கொடுத்தார் பாலா. பிக்பாஸ் 4 சீசனில் நிஷா மட்டும் பயன்படுத்தியதால் அனைவரும் அம்மியில் அரைத்து பழக வேண்டும் எனவும் கூறினார்.

திடீரென என்ட்ரி கொடுத்த அனிதா சம்பத் 4வது சீசனில் நிறைய முறை தானும் அம்மிக்கல்லில் அரைத்ததாகவும், கை வலி வந்து மருத்துவர்கள் சிகிச்சையளித்ததாகவும் தெரிவித்தார். அதனால் அனிதா சம்பத், நிஷா என 2 பேர் மட்டுமே அம்மியில் அரைத்திருக்கிறீர்கள் என்றார் பாலா. உடனே சுரேஷ் எப்படி அனிதா பெயரை விடலாம் என கேட்க, அதிகமாக அரைத்தது நிஷா தான் பதிலை பாலா சொல்ல அதை ஆமோதித்தார் அனிதா.

கோவக்காரர் பாலா என்ற கேள்வியை முன்வைத்தார் அபிராமி. வெப் சீரிஸ் டைரக்டர் தான் அமைதியானவர் என பேட்டியளித்ததாக பாலா பதிலளித்தார். பாலா மட்டும் பிக்பாஸில் பர்பெக்ட் என நிரூபிக்க முயற்சி செய்வதாக, அடுத்த கேள்வி கணையை வீசினார் சினேகன்.
பர்பெக்ட் என என்றைக்கும் தன்னை காட்டிக்கொள்ள விரும்பவில்லை என்ற பாலா, நானாக இருக்கவே விரும்பியதாக தெரிவித்தார். டபுள் சைட் கோல் போடுகிறீர்கள் என்ற கேள்வியை ஸ்ருதி கேட்க, வனிதாவுக்கு பிரச்சனை வந்தபோது, சினேகன் கேட்க சொன்னதால் ஷாரிக் கேட்டாரா என கேட்டதில் என்ன டபுள் சைட் கோல் இருக்கிறது என எதிர் கேள்வி எழுப்பினார், பாலா.

பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் நடைபெறும் கேப்டன் டாஸ்க்கிலும் ஆர்க்யூமென்ட்ஸ் அனல் பறந்து வருகிறது.

அனிதா சம்பத், அபிராமி வெங்கடாசலம், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனை முன்னிட்டு கார்டன் ஏரியாவில் போட்டியாளர்களின் போட்டோவுடன் போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அவரவர் போர்டுக்கு அருகில் உள்ள போட்டியாளர்கள் தாங்கள் ஏன் கேப்டனாக வேண்டும் என்றும் அடுத்தவர் ஏன் ஆகக்கூடாது என்றும் விளக்கம் கொடுக்கின்றனர். இதனை கேட்கும் சக போட்டியாளர்கள் கேப்டன் ஆக தகுதி இல்லை என எண்ணும் போட்டியாளர்களின் போட்டோவை சுத்தியலால் உடைத்து தங்களின் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவிக்கின்றனர்.

இந்த போட்டியில் அனிதா, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி தங்களின் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற கடும் வாக்குவாதம் செய்கின்றனர். பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத் தன்னை பற்றி கூறியதாக ஒரு விஷயத்தை கூற, இல்லவே இல்லை என அடித்து பேசுகிறார் அனிதா சம்பத். ஆக கேப்டன் டாஸ்க்கிலும் முட்டல்களும் மோதல்களும் தொடர்ந்துள்ளன.ஒவ்வொரு படியையும் கவனமாக பாலாஜி முருகதாஸ் எடுத்து வைப்பது ஒவ்வொரு டாஸ்கிலும் வெளிப்படுகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1228

    0

    0