பாவனிக்கு லவ் லெட்டர் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்.? என்ன நடந்தது.? இணையத்தில் வைரல் வீடியோ?

Author: Rajesh
3 June 2022, 8:14 pm

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 6-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிழ்ச்சிக்கு போட்டியாளர்களாக வருபவர்கள் காதல் சர்ச்சையில் சிக்குவதும், பின்னர் அவர்களே அதற்கு விளக்கம் கொடுப்பதும் 5 சீசன்களில் வழக்கமான நடப்பது ஒன்று தான். இதில் ஒரு சிலர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னரும், ஒன்றாக ஊர் சுற்றி வருவது தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த சீசனில், போட்டியாளர்களாக பங்கேற்ற பாவனி – அமீர் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்னரும் ஒன்றாக சுற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில், இவர்கள் இருவருமே இது தொடர்பாக எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஆனாலும் நாளுக்கு நாள் இவர்கள் தொடர்பான செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

அமீர் பலமுறை தன் காதலை பாவனியிடம் வெளிப்படுத்தியும், அதையெல்லாம் பொருட்டாக மதிக்காலும் இதுநாள் வரை இருந்து வந்தார். ஆனால் சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவர்கள் பங்கேற்ற போது அமீர் தனக்கு பிடித்த பாடலை பாட வேண்டும் என்று பாவனி வெளிப்படையாக கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடியது நடுவராக வந்த ரம்யா கிருஷ்ணனுக்கே அதிர்ச்சி அளித்த நிலையில் தற்போது அமீர் பாவ்னிக்கு லவ் லட்டர் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அமீர் கொடுத்த லவ் லெட்டரை பாவனி வீடியோவில் காண்பிக்க அதை அமீர் தடுத்துக்கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஏன் பாவனி இதைப்போய் மறைக்கிறீங்க, சீக்கிரம் சொல்லுங்க என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 730

    0

    0