அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் : ரூட்டை மாற்றிய எடப்பாடி பழனிசாமி..!!
Author: Udayachandran RadhaKrishnan31 January 2025, 2:28 pm
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இப்பவே ஆயத்தமாகி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மாவட்ட வாரியாக சென்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ளார் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படியுங்க: சாலையில் சென்ற வாகனம் மோதி கால்களை இழந்து சீறிய சிறுத்தை.. துடிதுடித்து உயிரிழந்த சோகம்!
2026 சட்டமன்ற தேர்தல் வியூகம், அதிமுக மேற்கொண்டு வரும் பணிகள், கட்சி வளர்ச்சி குறித்து முக்கிய விவாதம் செய்யப்பட்டது.
நிர்வாகிகளிடம் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, பிற கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பதவியை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
களஆய்வு கூட்டத்தின் போது தேவையில்லாத சலசலப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும், மற்ற மாமவட்டங்களில் நடந்தது போல சென்னையில் நடக்கக்கூடாது, தேவையில்லாதவர்களை ஆய்வுக் கூட்டத்திற்கு அழைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.