ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!
Author: Udayachandran RadhaKrishnan10 April 2025, 8:03 pm
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது தொடர்பான பணிகளும் நடந்து வருவதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் இன்னும் செயல்படவில்லை. இத்னிடையே தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மாட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கக்கூடும் என சய்திகளும் வெளியானது.
இதையும் படியுங்க: அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தது. அதானி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் விமர்சனத்தையும் முன் த்திருந்தனர். அதே சமயம் கடந்த டிசம்பர் மாதம் ஸ்மாட் மீட்டர் பொருத்துவதற்கான மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் ரத்து செய்தது.
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் டெண்டரில் அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்பதால் ரத்து செய்யப்படுவதாக தமிழக மின்சார வாரியம் விளக்கமும் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்ணாமலை தனது X தளப்பக்கத்தில், ஒரு புதிய ஸ்மார்ட் மீட்டர் மோசடி தயார் நிலையில் உள்ளது என்றும், இதற்கு காரணம் அமைச்சர்கள் உதயநிதி மற்றும் செந்தில் பாலாஜி என குறிப்பிட்டுள்ளார். விரைவில் விபரம் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக அரசு மீது டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட் மீட்டரில் மோசடி என அண்ணாமலை புகார் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.