பைக் விபத்தில் மணமகன் மரணம் : திருமணம் நடக்கவிருந்த 2 மணிநேரத்தில் நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
9 September 2022, 1:39 pm

தூத்துக்குடியில் இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், பைக் விபத்தில் மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஜெகதீஷ் (27). உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்று காலை 9 மணிக்கு திருமணம் நடைபெற இருந்தது. நேற்று இரவு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது.

இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் ஜெகதீஷ், தனது பைக்கில் துறைமுகம் – மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் பலியான சம்பவம் திருமண வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 714

    0

    0